‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்குப் பிறகு சந்தானம், பவர்ஸ்டார் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.
படத்தின் பெயர் ‘யா…யா…’ . எம் 10 புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ். முருகராஜ் தயாரிக்கும் இப்படத்தை ஐ. ராஜசேகரன் இயக்குகிறார். இசை – விஜய் எபினேசர். சிவா, சந்தானம், பவர்ஸ்டார், தன்ஷிகா, ‘காதல்’ சந்தியா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை இயக்கும் ராஜசேகரன், ‘ஓகே ஓகே’ இயக்குனர் ராஜேஷிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கும் இப்படத்தின் முதல் பார்வை இதோ…



