‘ராவணன்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் புதுமுகங்களான கௌதம், துளசியை வைத்து இயக்கியுள்ள படம் ‘கடல்’.
அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் திரைப்படம், அர்ஜுன் முதல் முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் படம், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தமிழில் நடிக்கும் முதல் படம், என இப்படி பல சிறப்புகள் இந்த படத்திற்கு உண்டு.
ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.
நேற்று சென்சாரான இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு சர்டிபிகேட்’ கிடைத்துள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில் ‘கடல்’ திரைக்கு வருகிறது.