ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார்.
கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில், சஞ்சய் தத் ஹீரோவாக நடிக்கும் ‘போலீஸ் கிரி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. விக்ரம் நடித்த ’சாமி’ படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம்.
சஞ்சய் தத், இயக்குனர் ரவிகுமாரிடம் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரும், அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதையடுத்து இருவரும் ரஜினிகாந்த் வீட்டில் சந்தித்தனர். சஞ்சய் தத்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ரஜினிகாந்த். அப்போது அவரிடம் ‘போலீஸ் கிரி’ படம் பற்றி விசாரித்தார்.
சஞ்சய் தத் , ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு ஹிந்திப்படத்தில் ஊட்டியில் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் நினைவு கூர்ந்தார்.