‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, இப்படி கொஞ்சம் நீளமான டைட்டில்களுக்கு அடுத்து புதுசா தயாராகப் போற படம்‘நீங்க நல்லா வருவீங்க பாஸ்’.
திரைப்பட வசனங்களை படங்களுக்கு டைட்டிலாக வைப்பது ஒன்றும் புதிதில்லை. சமீப காலமாக இப்படி கொஞ்சம் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன.
‘நீங்க நல்லா வருவீங்க பாஸ்’, படத்தை இயக்கப் போகிறவர் இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் பொன் ராம். ஹீரோவாக நடிக்கப் போகிறவர் சிவ கார்த்திகேயன். இசையமைக்கப் போகிறவர் இமான்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா,’, ‘எதிர் நீச்சல்’ படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சிவ கார்த்திகேயன் இப்போது பல புதிய இயக்குனர்களின் நாயகனாக வலம் வர ஆரம்பித்து விட்டார்.