தயாரிப்பு – மாயா கிரியேஷன்ஸ் – முக்தா வி. சீனிவாசன் இயக்கம் – சீனிவாசன் சுந்தர் இசை – கே.எஸ். மனோஜ் – ஜி.டி. பிரசாத் ஒளிப்பதிவு – சி.எச். ராஜ்குமார் பாடல்கள் – சிவகாசி ஸ்ரீதர், நிஷாந்த் நடனம் – எஸ்.எல். பாலாஜி, ரமேஷ் ரெட்டி சண்டைப் பயிற்சி – சங்கர் படத்தொகுப்பு – சுஜித் சகாதேவ் நடிப்பு – துருவ், மாடல்ஷா, விவேக், கனிஷ்கா, செல் முருகன், அல்வா வாசு, கோகுல் மற்றும் பலர்.
‘பத்தாயிரம் கோடி’ ன்னு தலைப்பை பார்த்ததும் ஏதோ ஒரு சீரியஸான படம்னு நினைச்சிட வேணாம். இது பக்கா காமெடி படம்.
துருவ், மாடல்ஷா, கோகுல் மற்றும் சிலர் காலேஜ்ல ஒன்னா படிக்கிற நண்பர்கள். இதுல ஒருத்தர் ‘ஆளை’ மறைய வைக்கிற ‘கெமிக்கல்’ மாதிரி ஏதோ ஒரு விஷயத்தை கண்டு பிடிக்கிறாரு. இதன் மூலமா ‘கோகுல்’ஐ மறைய வக்கிறாங்க. இதை வச்சி இவங்களுக்கு நாட்டுக்கு எதுவும் நல்லது பண்ணணும்னு தோணலை. ஊர்ல இருக்கிற வில்லங்கமான ஒரு பெண்மணிகிட்ட இருந்து ‘பத்தாயிரம் கோடி’ பெறுமானமுள்ள தங்கம், வைரம், பணம் எல்லாத்தையும் அடிச்சிடறாங்க.
பணத்தைக் காணாத பெண்மணி காவல்துறையை அணுக சிஐடி ஆபீசரான விவேக் கிட்ட கேஸை ஒப்படைக்கிறாங்க. பணத்தை எடுத்த நண்பர்கள் கூட்டம் பணத்தோட மும்பைக்கு கிளம்பறாங்க. விவேக் அந்த கூட்டத்தை கண்டுபிடிச்சாரா, இல்லையான்றதுதான் படத்தோட மீதி கதை.
படத்தோட ஹீரோன்னு சொன்னால் விவேக்தான். காமெடி படம்கறதால எந்த லாஜிக்கையும் கேக்காம அவர் பண்ற காமெடியலாம் ரசிக்கலாம். அவருக்கு பக்கபலமா இப்படிலாம் கூட ஆள வச்சிப்பாங்களான்னு கேக்கற மாதிரி ஒரு 5 பேர் அடிக்கிற கமென்ட்ஸ் கண்டிப்பா ஃபேஸ்புக்ல படிக்கிற கமென்ட் மாதிரியே நல்லா இருக்கு.
படத்துல இளமையா ஏதாச்சும் இருக்கணும்னு ஒரு காதல் ஜோடி. துருவ், மடால்ஷா. டூயட் பாடல்களுக்கு யூஸ் ஆகியிருக்காங்க.
பத்தாயிரம் கோடி ரூபாயோட துருவ் அன்ட் கோ போறதும், அவங்களை விவேக் அன்ட் கோ துரத்தறதும், பின்னாடியே இன்னொரு கூட்டமும் துரத்தறதும்னு இரண்டாவது பாதி ஃபுல்லா ஒரே காமெடி சேசிங்தான்.
அழகான பொய்கள்….,பூமிகா …..பாட்டும் மெலடியா அமைஞ்சி ரசிக்க வச்சிருக்கு.
சில இடங்கள்ல இருக்கிற நாடகத்தனமான காட்சிகளைத் தவிர்த்துட்டு பார்த்தால் ‘பத்தாயிரம் கோடி’ பரவாயில்லைன்னு சொல்ற படம்தான்.