50வது நாளில் ‘கும்கி’

kumki-50th-dayடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான ‘கும்கி’ திரைப்படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளைத் தொட்டது. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து ஸ்டுடியோ க்ரீன்  வெளியிட்டுள்ள படம்.

‘மைனா’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்குப் பின் பிரபு சாலமன் இயக்கத்தில் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த படம். மலையும் மலை சார்ந்த இடத்துப் பின்னணியில் மீண்டும் ஒரு அழகான காதலைக் கொடுத்திருந்தார்.

இமானின் இசையில் பாடல்கள்….அய்யய்யோ….ஆனந்தமே என தாளம் போட வைத்தன.

இந்த படத்தின் வெற்றி விக்ரம் பிரபுவுக்கு தொடர்ச்சியான படங்களை கொடுத்து வருகிறது.

ஒரு நல்ல படத்தின் அடையாளமே அது அதிகமாக விமர்சிக்கப்படுவதுதான். இந்த படத்திற்கு அப்படிப்பட்ட விமர்சனமும் கிடைத்தது, வியாபார ரீதியாக நல்ல வெற்றியும் கிடைத்தது…

வாழ்த்துக்கள் ‘கும்கி’ டீம்..

Read Previous

‘சேட்டை’யில் மதன் கார்க்கியின் 100வது பாடல்…

Read Next

கடல் – விமர்சனம்