ராகவா லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடித்து வரும் படம் ‘முனி – 3’. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸீ நடிக்கிறார்.
இப்படத்திற்கு தற்போது ‘கொலை வெறி’ புகழ் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைப்பார் என சொல்லப்பட்டிருந்தது.
இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அனிருத், ‘முனி 3’ படத்திற்கு இசையமைப்பதாக சொல்லியிருந்தார். தெலுங்குப் படம் ஒன்றுக்கு அனிருத் இசையமைக்கப் போவது இதுவே முதல் முறை.
இப்படி இசையமைப்பாளரை லாரன்ஸ் மாற்றுவது வழக்கம்தான் என ஆந்திர மீடியாக்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதற்கு முன் லாரன்ஸ் இயக்கிய ‘ரிபெல்’ படத்திற்கும் முதலில் தமன் இசையமைப்பதாக இருந்ததாகவும், பின்னர் அவரை மாற்றி விட்டு லாரன்ஸே அந்த படத்திற்கு இசையமைத்தார், படம் படு தோல்வியானது .
லாரன்ஸும், விஜய் ஆண்டனியும் இணைந்து சில மாதங்களுக்கு முன் கூட ‘இது ரஜினி ஆல்பம்’ என்ற ரஜினி பற்றிய பாடல் ஒன்றையும் வெளியிட்டனர்.
அதற்குள் இசையமைப்பாளரை மாற்றி விட்டார் லாரன்ஸ். இசையமைப்பாளரை மாற்றச் சொல்லி , எங்க இருந்து ரெகமென்டேஷன் வந்தது என்பது அவருக்கே வெளிச்சம்.