‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து லியோ விஷன் தயாரிக்கும் புதிய படம் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா.
விஜய் சேதுபதி, ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி, ‘அட்டகத்தி’ நந்திதா இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படத்தை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்குகிறார்.
நம் அன்றாட வாழ்வில் நிகழும் நகைச்சுவையின் பின்புலம் அதை விட நகைச்சுவையானது. அதை முழு நீள நகைச்சுவையாக முன்னெடுக்கிறது இந்த திரைப்படம்.
‘சுமார் மூஞ்சி குமார்’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
சித்தார்த் விபின் இசையமைக்க, மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய, ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, லியோ விஷன் சார்பில் வி.எஸ். ராஜ்குமார் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.
அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் ஆரம்பமாகி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.