சரண் படத்தில் மூன்று ஹீரோயின்கள்

senthatti kalai sevatha kalai posters_00011ஒரு இடைவெளிக்குப் பிறகு சரண் இயக்கி வரும் படம் ‘செந்தட்டிக் காளை செவத்தக் காளை.’

நகர்ப்புறம் சார்ந்த படங்களையே இயக்கி வந்த இயக்குனர் சரண், இந்த படத்தில் திருநெல்வேலி சுற்றுப்புறத்தில் நடக்கும் கதையாக இந்த படத்தை இயக்கி வருகிறார்.

“காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா, அட்டகாசம், வட்டாரம், அசல்” ஆகிய படங்களைத் தொடர்ந்து சரண் இயக்கி வரும் படம் இது.

வினய் இந்த படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயின்களாக சாமுத்ரிகா, காம்பரி, ஷில்பா வர்மா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். ஸ்ரீஜித் ரவி, இளவரசு, ஞானசம்பந்தன், அவன் இவன் ராம்ராஜ், வழக்கு எண் முத்துராமன், பிரதீப் ராவத் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

பரத்வாஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவரின் 75வது படம் இது.

இப்படத்தின் சில காட்சிகள் மும்பை மற்றும் ஹாங்காங்கில் படமாக்கப்பட உள்ளன.

வேகா என்டர்டெயின்மென்ட் சார்பாக விக்ரம் ராஜ் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.

Read Previous

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…

Read Next

மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பட பூஜை