என்டிஆர்-க்கு பாடிய எஸ்டிஆர்

str-thamanஎஸ்டிஆர் (சிம்பு), ஜுனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்குத் திரைப்படம் ஒன்றுக்கு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

சீனு வைட்லா இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ‘பாட்ஷா’.

இப்படத்திற்காக தமன் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் சிம்பு. ‘டயமன்ட் கேர்ல்’ என்ற இந்த பாடலை சிம்பு அருமையாகப் பாடியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் தமன்.

இதன் மூலம் தெலுங்கிலும் ஒரு பாடகராக தடம் பதித்திருக்கிறார் சிம்பு.

Read Previous

ஆதி பகவன் – ‘பகவான்’ ஜெயம் ரவி அறிமுகக் காட்சி வீடியோ

Read Next

ஆர்யா ஜோடியாக சமந்தா