மதுரைக்காரனாக சூர்யா…

suryaசூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்த படம் முடிந்ததும் சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதற்கும் அடுத்து அநேகமாக சசிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

சில வாரங்களுக்கு முன் சசிகுமாரும், சூர்யாவும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது மதுரை பின்னணியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார் சசிகுமார். அந்த கதை சூர்யாவுக்குப் பிடித்துப் போக நடிப்பதற்கு சம்மதித்ததாகத் தெரிகிறது.

இப்படத்திற்காக மதுரை பாஷையை தெளிவாகக் கற்கவும் சூர்யா முடிவு செய்திருக்கிறாராம்.

சசிகுமார் தற்போது ‘குட்டிப் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு வீச்சாக சூர்யா படத்தில் ஈடுபடுவார். அதில் இயக்கம் மட்டுமதானாம், நடிக்கவே மாட்டாராம் சசி.

புது காம்பினேஷன் , கலக்குங்க…

 

 

Read Previous

அஜித் படம் – துபாய் படப்பிடிப்பு முடிந்தது…

Read Next

வெங்கட் பிரபுக்கு பரிசளித்த கார்த்தி…