சித்தார்த் – சமந்தா ஜோடியாக நடித்து கடந்த வாரம் தெலுங்கில் வெளியான படம் ‘ஜபர்தஸ்த்’. இந்த படம் தமிழில் ‘டும் டும் பீ பீ’ என்ற பெயரில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. அதன் பின் எந்த சத்தமும் இல்லை. டப்பிங் ரைட்ஸ் மட்டும் 2 கோடி என்று சொல்லப்படுகிறது.
இந்த படம் ஹிந்தியில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘பேன்ட் பாஜா பாரட்’ என்ற படத்தின் அப்பட்டமான தழுவல் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை அந்நிறுவனமே தமிழ் மற்றும் தெலுங்கில் ‘நான் ஈ’ படத்தில் நடித்த நானியை வைத்து எடுப்பதாகவும் இருந்ததாம்.
ஆனால், ‘ஜபர்தஸ்த்’ படத்தின் முதல் பாதி காட்சிகள் அனைத்துமே மேற்சொன்ன படத்திலிருந்து அப்படியே காப்பி அடித்து விட்டார்களாம். திருமண ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் ஏஜன்சி நடத்துபவர்களாக சித்தார்த்தும், சமந்தாவும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஆனால் இந்த படத்தின் இயக்குனரான நந்தினி ரெட்டி அப்படி எதுவும் காப்பி அடிக்கவில்லை என மறுக்கிறார்.
ஆந்திரத் திரையுலகில் இப்போது இதுதான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.
தமிழில் ‘டும் டும் பீ பீ ’ வெளிவந்தால் தெரியப் போகிறது…காப்பியா இல்லையா என்று.