‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்தியின் ‘சித்தப்பு’வாக நடித்து நாயகனாக நடித்து பேர் வாங்கியதை விட அதிக பேர் வாங்கியவர் சரவணன்.
நாயகனாக 25 படங்கள் நடிச்சிருந்தாலும் ‘பருத்தி வீரன்’ படத்துல குணச்சித்திர வேடத்துல நடிச்சதால அதுக்கப்புறமா 20 படங்கள்ல நடிச்சிட்டாரு.
இப்ப ‘கீரிப்புள்ள’ படத்துல ஒரு நல்ல கேரக்டர்ல நடிச்சிருக்காரு.
“ஹீரோ கேரக்டர் வந்தாலும் சரி, இல்ல வில்லன் கேரக்டர் வந்தாலும் சரி, அப்படியும் இல்லன்னா அண்ணன், மாமன், மச்சான், அரிவாள் தூக்குற அடியாள், இப்படி எந்த கேரக்டரா இருந்தாலும் நடிக்க ரெடி, என்ன எனக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் இருந்தால் போதும், ” இப்படி ஓபனா சொல்றாரு சரவணன்.
இப்படி ஓபனா பேசினாலும் , உண்மைய பேசி பட்டையக் கிளப்புறாரு ‘சித்தப்பு’ சரவணன்.