அக்‌ஷய் குமார் பாராட்டிய ‘வத்திக்குச்சி’

dileepan-akshaykumar.ஆர். முருகதாஸ், ஃபாக்ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நாளை  வெளியாக உள்ள படம் வத்திக்குச்சி.

இப்படத்தின் நாயகனான ஏ.ஆர். முருகதாஸின் தம்பி திலீபன் ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமாரின் தீவிர ரசிகர். அவரைப் பார்ப்பதற்காக திலீபன் இன்று மும்பை சென்றிருந்தார்.

வத்திக்குச்சி படத்தின் சில காட்சிகள், மற்றும் டிரைலரை  அக்‌ஷய்குமாருக்கு திலீபன் போட்டுக் காட்டினார். இவற்றைப் பார்த்து மிகவும் பாராட்டிய அக்‌ஷய் நாளை வத்திக்குச்சி படத்தை முழுவதுமாகப் பார்க்கிறார்.

பஞ்சாபி மொழியில் வத்திக்குச்சி படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் அக்‌ஷய் குறிப்பிட்டுள்ளார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், இயல்பாக நகரும் விதமும் அவரைக் கவர்ந்துள்ளன.

அக்‌ஷய் குமார் நடித்த ரவுடி ரத்தோர் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றையும் திலீபன் நினைவு கூர்ந்து பேசியதைப் பார்த்து அக்ஷய் குமாய் வெகுவாகப் பாராட்டினார்.

வத்திக்குச்சி வெற்றியடையவும் வாழ்த்தினார்.

 

 

Read Previous

ராம்கோபால் வர்மா உதவியாளர் இயக்கும் ‘கூட்டம்’

Read Next

எந்த வேடத்திலும் நடிக்க ‘சித்தப்பு’ சரவணன் ரெடி

Most Popular