ராம்கோபால் வர்மாவின் உதவியாளரான எம்.ஆர். ஜீவன் இயக்கும் முதல் படம் ‘கூட்டம்’.
மம்மூத் மீடியா அன்ட் என்டர்டெய்ன்மென்ட் சுமந்த் குமார் ரெட்டி தயாரிக்கும் படம் இது. ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க ‘பழனியப்பா கல்லூரி’ படத்தில் நாயகனாக அறிமுகமான நவீன் சந்திரா இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக பியா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் மற்றும் நாசர், சாய்குமார், மகாதேவன், பிரகதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படித்து விட்டு மக்களுக்காக ஆயுதம் ஏந்தும் நக்சலைட்டுகள், ஒரு கட்டத்தில் தங்கள் தவறுகளை உணர்ந்து போலீசிடம் தஞ்சமடைகிறார்கள். சரணடைந்த அவர்கள் பண பலம், பதவி பலம் மிக்கவர்களின் அடியாளாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் அவர்கள் ஒரு சூழ்நிலைக் கைதியாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறார்கள். அதன் பின் அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
முற்றிலும் ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘கூட்டம்’ , சென்னை, பொள்ளாச்சி, குலு மனாலி, விசாகப்பட்டிணம், தர்மபுரி, கடலூர், நகரி ஆகிய ஊர்களில் படமாக்கப்பட்டுள்ளது.
‘கூட்டம்’ விரைவில் திரைக்கு வருகிறது.