ஒரியண்டல் பிக்சர்ஸ் மற்றும் ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்னும் புதிய நிறுவனங்கள் தயாரிக்கும் திகில் நிறைந்த தமிழ்த்திரைப்படம் “காந்தாரி”
இதில் கதாநாயகனாக சாட்டை, கீரிபுள்ள, சொகுசு பேருந்து நிலையம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் யுவன் , கதாநாயகியாக மும்பை வரவு புதுமுகம் அறிமுகம் இசா மற்றும் இன்னொரு நாயகியாக பிரிதிக்ஷா மைதிலி அறிமுகமாகிறார்கள்.
இவர்களுடன் நாசர், சந்தானபாரதி, காதல் தண்டபாணி, கலாபவன் மணி, வடிவுக்கரசி மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
குடும்பமே தற்கொலை செய்துகொண்ட ஒரு வீடு. அங்கே யாருமே குடிவராத நிலையில் காதலர்கள் இருவர் எதிர்த்தவர்களிடம் இருந்து தப்பித்து இந்த வீட்டில் தஞ்சம் அடைகின்றனர்.
இறந்தவர்களில் காந்தாரி என்ற இளம்பெண், தன் குடும்பம் அழிவதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க உடல் தேடி அலையும் போது கதா நாயகன் மாட்டிக்கொள்ள, அவன் உடம்பில் தொற்றிக் கொள்கிறாள்.
காதலனின் உடம்பில் இருந்து காந்தாரி வெளியேறினாளா..? காதல் கை கூடியதா ..? என்பது தான் கதை.
இப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் MK. குமார். இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இசையமைக்க மொத்தம் 4 பாடல்கள் படத்தில் இடம்பெறுகிறது.
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி காரைக்குடியில் முடிவடைகிறது.