விமல், ராஜ்கிரண் நடிக்கும் ‘மஞ்சப்பை’

manja pai shooting_00004‘களவாணி’, ‘வாகை சூடவா’ படத்தை இயக்கிய சற்குணம் ‘சற்குணம் சினிமாஸ்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்து, அவரின் உதவியாளர் என். ராகவன் இயக்கத்தில் ‘மஞ்சப்பை’ என்ற படத்தை, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்திற்காக, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், விக்ரம் பிரபு நடிக்க , எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் ‘இவன் வேற மாதிரி’ படத்தையும் தற்போது தயாரித்து வருகிறது.

‘மஞ்சப்பை’ படத்தில் விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். வாகை சூடவா, வத்திக்குச்சி படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

யதார்த்தமான காதல், காமெடி, சென்டிமென்ட் கதையான இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read Previous

‘பரதேசி’ – இயக்குனர் வசந்த பாலன் பாராட்டு…

Read Next

‘பீட்சா – 2’ படத்தை இணைந்து தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன்