பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் , யாமி கௌதம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கௌரவம்’.
விரைவில் வெளிவர இருக்கும் இந்த படத்தில் சாதிப் பிரச்சனைகளை மையப்படுத்தியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும் படமாக எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் தனக்கு பேஸ்புக், ட்விட்டர் மூலமாக மிரட்டல் விடப்படுகிறது என பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார் பிரகாஷ்ராஜ்.
“நீ ஒரு கன்னடக்காரன் , ஏன் இப்படி ஒரு தமிழ்ப் படத்தை எடுக்கறன்னு, எனக்கு பேஸ்புக், ட்விட்டர் மூலமா மிரட்டல் விடுக்கறாங்க.
எங்க ஊரைப் பத்தி படம் எடுக்கறீங்களாமே, எங்களைப் பத்தி படம் எடுக்கறீங்களாமேன்னு, கேக்கறாங்க…இப்படி கேக்கற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.
ஒரு படைப்பாளியோட சுதந்திரம் எங்கே போய்க்கிட்டிருக்கு ? அவனுக்கான உரிமை எந்த அளவுக்கு இருக்கு, இப்படி ஆளாளுக்கு கேள்வி கேட்கிறதால படைப்பாளியோட சுதந்திரம் பாதிக்கப்படுது.
கருத்து சொல்ற உரிமை எல்லாருக்கும் இருக்கு, உனக்கு எப்படி எங்களை திட்டற உரிமை இருக்கோ , அதே மாதிரி எங்களுக்கும் கருத்து சொல்ற உரிமை இருக்கு, ” எனப் பேசினார்.
எது எப்படியோ பேஸ்புக், ட்விட்டர்-ல நாலு பேர் எதிர்த்து கருத்து போட்டால் அதைப் பத்திப் பேசி படத்துக்கு நல்லா விளம்பரம் தேடிக்கிறாங்க….