நடிகை அஞ்சலி கடந்த சில நாட்களாக காணாமல் போனதன் காரணம் காதல் என சொல்லப்படுகிறது.
அஞ்சலியை நடிகையாக்கியவர் அவருடைய சித்தி பாரதி தேவி. சிறு வயதிலேயே அஞ்சலியை இவர் தத்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தினசரி ஏதாவது புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இன்று ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சலி, அவருடைய ‘பர்சனல் டாக்டர்’ ஆக இருப்பவரை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. விரைவிலேயே அவரை திருணமம் செய்யவும் திட்டமிட்டிருந்தாராம்.
இந்த காதல் விவகாரம், அஞ்சலியின் சித்தி பாரதி தேவிக்குப் பிடிக்கவில்லை என்று கூறுப்படுகிறது. இதனால்தான் , இருவருக்குமிடையே பிரச்சனை எழுந்ததாகவும், அதனால் அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
அஞ்சலி விவகாரத்தில் ஹைதராபாத் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். விரைவில் உண்மை காரணம் என்ன என்பது தெரிய வரும்.