தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் விற்கப்படும் அரிசி விலை சமீப காலமாக மிகவும் உயர்ந்தபடி உள்ளது. இது ஏழைகள், நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்பதாக உள்ளது. இதை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தார்.
இந்த நிலையில் இந்த புதிய திட்டம் நாளை (புதன்கிழமை) தொடங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். நாளை காலை 9.30 மணிக்கு நந்தனம் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கு வணிகத்தில் இதற்கான விழா நடக்கிறது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் இந்த 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி நாளை முதல் வழங்கப்படும்.