தெலுங்கு திரையுலகத்தில் தேவிஸ்ரீபிரசாத், மணிசர்மா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விட்டு வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தமன்.
தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், இன்னும் தெலுங்கு அளவுக்கு இங்கு பெயர் வாங்காமல்தான் இருக்கிறார்.
தொடர்ச்சியாக பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் தமன், ட்விட்டரில் அடிக்கடி ஏதாவது தட்டி விட்டுக் கொண்டேயிருக்கும் பழக்கமுடையவர்.
இது தமனை தன் படத்திற்கு இசையமைக்க வைத்திருக்கும் இயக்குனர் ஹரிஷ் சங்கருக்கு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. அவரும் ட்விட்டரிலே அந்த எரிச்சலை வெளிப்படுத்தியதுதான் பெரிய ‘ட்விஸ்ட்’.
“நீங்க் ட்விட் செய்யறதையெல்லாம் கொஞ்சம் நிறுத்திட்டு, என் படத்தோட (ராமையா ஒஸ்தாவையா) வேலைய முடிங்க. இது என்னோட வேண்டுகோள். இல்லன்னா தசரத் (கிரேக்கவீருடு இயக்குனர்) வேலையாவது முடிங்க. ஆனால், வேலை பார்க்கும் போதாவது ட்விட் பண்றத நிறுத்துங்க,” என ட்விட்டரிலேயே இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் சங்கர்.