த்ரிஷா தற்போது, ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ ‘ரம்பா ஊர்வசி மேனகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்குப் பிறகு ‘ப்ரியம்’ படத்தை இயக்கிய பாண்டியன் இயக்கப் போகும் புதிய படத்தில் நடிக்கப் போகிறார்.
ஹீரோ கதாபாத்திரம் இல்லாத இந்த படத்தில் த்ரிஷா , பூனம் பஜ்வா , மற்றுமொரு நடிகை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள்.
இந்த படத்தைப் பற்றி இயக்குனர் பாண்டியன் கூறுகையில் , “ த்ரிஷா இந்த படத்தில் நடிக்கப் போவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இந்த படம் வந்த பிறகு இந்து மாதிரி நமக்கும் ஒரு தோழி இல்லையே என ஏங்க வைக்கும் அளவிற்கு இருக்கும். மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறேன், ” என்றார் இயக்குனர் பாண்டியன்.