யாரையும் காதலிக்கவில்லை – ஹன்சிகா

hansika_00001மிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி ஹீரோயின் ஹன்சிகா மட்டுமே.

தற்போது அதிக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் நடிகையும் இவரே. அதே சமயம் இவரைப் பற்றி சமீப காலமாக நிறையவே வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இவருக்கும் தமிழின் மிகப் பெரிய ஹீரோ ஒருவருக்குமிடையே  காதல் (?) என கடந்த சில வாரங்களாக செய்தி இருந்து வந்ததாம்.

ஆனால் ஹன்சிகாவே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என மறுக்கிறார்.

இது சம்பந்தமாக ஹன்சிகா கூறியதாவது, “ என்னை தொடர்புபடுத்தி பல செய்திகளை கேள்விப்படுகிறேன். இவற்றையெல்லாம் கேட்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது.  இந்த வதந்திகள் எவற்றிலும் உண்மையில்லை. நான் யாரையாவது காதலித்தால் கண்டிப்பாக அதைப் பற்றி வெளியே சொல்லுவேன். பிரபலமானவர்கள் என்றாலே இப்படிப்பட்ட செய்திகள் வருவது சகஜம்தான்,”  என தெரிவித்துள்ளார்.

Read Previous

‘ஜேகே எனும் பாசிட்டிவ் எனர்ஜி’ – சேரன்

Read Next

த்ரிஷா நடிக்கும் புதிய படம்…

Most Popular