ஹிந்தி பேசி அசத்தும் தனுஷ்…

raanjhanaa

இயக்குனர்களின் நடிகர் என இங்கு பெயரெடுத்துள்ள தனுஷ், விரைவில் ஹிந்தியிலும் இயக்குனர்களின் நடிகர் என பெயரெடுத்து விடலாம்.

தனுஷ் சொந்த குரலில் ஹிந்தியில் பேசி நடித்துள்ள இந்த படத்தில், அவர் ஹிந்தியில் பேசியுள்ள டிரைலர் முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது. ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’ போல, குறும்புத்தனமான தனுஷை இந்த டிரைலரில் பார்க்க முடிகிறது.

 இரண்டு நாட்களுக்கு முன் யு டியூபில் வெளியிடப்பட்ட டிரைலரை அதற்குள்ளாகவே 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்   கண்டு ரசித்துள்ளனர்.

தனுஷ், ஜோடியாக சோனம் கபூர் நடித்திருக்கும் இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இவர் ‘தனு வெட்ஸ் மனு’ படத்தை இயக்கியவர். ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

நடராஜ் சுப்ரமணியம், விஷால் சின்ஹா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுன் 21ம் தேதி படம் வெளியாகிறது.

Read Previous

50 வயது நடிகருடன் மீரா ஜாஸ்மின் ஜோடி !

Read Next

‘மத்தாப்பூ’ இசை வெளியீடு , பாக்யராஜின் ‘குறும்பு’ பேச்சு