50 வயது நடிகருடன் மீரா ஜாஸ்மின் ஜோடி !

inga enna solluthu news

‘இங்க என்ன சொல்லுது, ஜெஸ்ஸி…ஜெஸ்ஸி…ன்னு சொல்லுதா’ என்ற ஒரு வரி வசனத்தால் பிரபலமடைந்தவர் விடிவி கணேஷ். கௌதம் மேனனுடன் இணைந்து சில படங்களில் தயாரிப்பு வேலைகளையும் பார்த்தவர்.

பின்னர், சந்தானத்துடன் நெருக்கமானதால் அவர் தயவில் ‘வானம், கண்ணா லட்டு தின்ன ஆசையா’ இப்படி சில படங்களில் தொடர்ந்து நடித்து ஒரு காமெடி நடிகராக இப்போதுதான் வளர்ந்து வருகிறார்.

‘பவர் ஸ்டார்’ ஜெயிக்கும் போது நாம ஜெயிக்க முடியாதா என்ற கேள்விகளுடன் இப்போது தமிழ்த் திரையுலகத்தில பலரும் ‘ஹீரோ’வாக மாறி வருகின்றனர்.

அந்த வரிசையில் ‘இங்க என்ன சொல்லுது’ படம் மூலம் விடிவி கணேஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்து விட்டார். வளர்ந்து வரும் இந்த புதிய, 50 வயதுக்கு மேற்பட்டவருடன் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிப்பது கொஞ்சம் அதிர்ச்சி அலைகளையும், சிலருக்கு பொறமை அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அழகான, திறமையான நடிகை என பெயரெடுத்தவர், அஜீத்,   விஜய், விஷால்,  மாதவன், தனுஷ் , பரத் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தவர் திடீரென , வயதான விடிவி கணேஷுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்காக அவருக்கு வழக்கத்தை விட அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படித்தான் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தில் வடிவேலுவுடன் ஜோடியாக ஒரு பாடலில் மட்டும் நடனமாடியதால் அழகான ஸ்ரேயாவை , தங்கள் படங்களில் ஜோடியாக நடிப்பதை தவிர்த்து அவரை தமிழ்நாட்டை விட்டே அனுப்பி விட்டனர் நம்ம ஹீரோக்கள், என்ற பேச்சும் நம் காதில் விழுகிறது…

ம்ம்ம்ம்…‘இங்க என்ன சொல்லுது,’ படத்தி  ‘வேற என்னத்த சொல்றது’….படம் ஜெயிச்சிட்டால் நிறையவே சொல்லுவாங்க…

Read Previous

விஷால் தயாரித்து நடிக்கும் ‘பாண்டிய நாடு’

Read Next

ஹிந்தி பேசி அசத்தும் தனுஷ்…

Most Popular