திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக விக்ரமன் தேர்வு

director-vikramanதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு 2013- 15ம் ஆண்டிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் தலைவராக இயக்குனர் விக்ரமன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தேர்தலில் விக்ரமன் தலைமையில் ஒரு அணியும், விசு தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

 விக்ரமன் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விக்ரமனும், செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு வி.சேகரும் போட்டியிட்டனர். துணை தலைவர் பதவிக்கு பி.வாசும், கே.எஸ்.ரவிக்குமாரும் போட்டியிட்டனர். இணை செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, ஷண்முக சுந்தரம், ஏகம்பவாணன், பேரரசும் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக திருமலை உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

விசு தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விசுவும், செயலாளராக ஆர்.சுந்தர்ராஜன், பொருளாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. துணை தலைவராக மங்கை அரிராஜன், அரவிந்த்ராஜ் ஆகியோரும், இணை செயலாளர்களாக செய்யாறு ரவி, வி.பிரபாகர், ஜெய்பிராகஷ், கண்ணன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக  ரவிமரியா உள்ளிட்ட 12 பேரும் போட்டியிட்டனர்.

1723 ஓட்டுக்கள் கொண்ட சங்கத்தில், தபால் ஓட்டுக்களையும் சேர்த்து 1289 ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகின.

ஓட்டு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கியது.  இரவு 10 மணி அளவில் தலைவர் பதவிக்கான முடிவு மட்டும் அறிவிக்கப்பட்டது. இதில் விக்ரமன் 717 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். விசுவிற்கு 562 ஓட்டுகள் கிடைத்தன.

மற்ற பதவிக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

Read Previous

The Lost Paradise – Short Film

Read Next

மீண்டும் இரு வேடங்களில் ஜெயம் ரவி…