கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அமலா பால் இப்போது விஜய் ஜோடியாக ‘தலைவா’ படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் நடித்து வருகிறார்.
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பூஜை போடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை சூர்யாவின் ஜோடி யார் எனத் தெரியாமலேயே இருந்தது.
த்ரிஷா, அமலா பால் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் சூர்யா ஜோடியாக நடிக்கலாம் என செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அந்த போட்டியில் அமலா பால் வென்றிருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் சிம்ரன் , சூர்யாவின் தாயாக நடிக்கிறார். பார்த்திபன், பில்லா 2 படத்தில் நடித்த சுதன்ஷு பான்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.