‘அடேங்கப்பா….ஆறு பேர்…’

pattathu yaanai audio launchவிஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் , சந்தானம் நடிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில், தன் இசையமைப்பில் உருவாகி வரும் ‘பட்டத்து யானை’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் விஷால் பேசும் போது இப்படத்திற்கு இதற்கு முன் வைத்த பெயர் ‘அடேங்கப்பா..ஆறு பேர்..’ என்ற ஒரு புதிய தகவலைச் சொன்னார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது,

“நானும் பூபதி பாண்டியனும் ரொம்ப நாள் முன்னாடியே படம் பண்ண வேண்டியது. ‘மலைக்கோட்டை’ படம் முடிஞ்ச உடனேயே அடுத்த படம் பண்ணணும்னு நினைச்சோம். ஆனால், அது இப்பதான் நடக்குது. 5 வருஷம் கழிச்சி இந்த படத்துல இணையறோம்.

ஒரு நண்பனா, சகோதரனா, ஒரு நடிகனா நான் பூபதி பாண்டியன் கிட்ட சொல்றது ஒரே விஷயம்தான். இனிமேல் ‘கேப்’ கொடுக்காதீங்க. இந்த பட்டத்து யானைக்கப்புறம் உங்க பாதை வெற்றியை நோக்கிதான் இருக்கும்.

இந்த படத்தோட ஒரிஜனல் டைட்டில் ‘அடேங்கப்பா ஆறு பேர்’. இந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்குன்னு பூபதி பாண்டியன் சொன்னாரு. ஒரு நண்பனாதான் கதைய கேட்டேன். இந்த படத்துல அவர் இன்டர்வெல் பிளாக்குல ஒரு விஷயம் வச்சிருப்பாரு. அதைக் கேட்டதும் நான் ரசிச்சி கைதட்டினேன். உடனே, இந்த படத்தை நான் பண்ணணும்னு கேட்டேன்.

ஒரு ஹீரோ, ஹீரோயினுக்குதான் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகணும்னு அவசியமில்லை. ஒரு இயக்குனருக்கும், கதாநாயகனுக்கும் கெமிஸ்ட்ரி நல்லவிதமா அமைஞ்சால் எல்லாமே நல்ல விதமா நடக்கும்.

‘செல்லமே’ படத்துல என்னை எப்படி வரவேற்றீங்களோ, அதே மாதிரி எங்க குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவையும் வரவேற்கணும்.

சந்தானம் இந்த படத்துல ஒரு வித்தியாசமான கெட்டப்புல படம் முழுக்க கலக்கியிருக்காரு.

இந்த இன்டஸ்ட்ரியைப் பொறுத்தவரைக்கும் நடிகன் என்ன வேணா நடிக்கலாம், இயக்குனர் என்ன வேணா யோசிக்கலாம், ஆனால், ஒரு நல்ல புரொடியூசர் இருந்தால்தான் மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க முடியும். அது இந்த படத்துல நல்லா நடந்துட்டிருக்கு, ” என்றார்.

Read Previous

சூர்யா ஜோடியாக அமலா பால்

Read Next

27ம் தேதி ஜிவி பிரகாஷ் – சைந்தவி திருமணம்