ஏஜிஎஸ் தயாரிப்பில் சந்துரு இயக்கத்தில், ஜெய், நிவேதா தாமஸ் நடிக்கும் ‘சரஸ்வதி சபதம்’ படத்தின் பெயர் ‘நவீன சரஸ்வதி சபதம்’ என மாற்றப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திற்கு பெயர் வைக்கும் போதே சிவாஜி ரசிகர்கள் பிரச்சனை செய்ததால் அந்த படத்தின் பெயரை ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என மாற்றி வைத்தனர்.
இந்நிலையில் ‘சரஸ்வதி சபதம்’ படத்திற்கும் சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் இந்த படத்தின் பெயரும் மாற்றப்பட்டு விட்டது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் இப்படத்தின் இசை வெளியாக உள்ளது.