இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’.
எவிஎ புரொடக்ஷன் – அனுப் தயாரிப்பில் , குரு ரமேஷ் இயக்கிய வரும் இப்படத்தில் அதிதி, ஆக்ருதி, அக்ஷிதி, ஆப்தி என்ற ஒரே பிரசவத்தில் பிறந்த 8 வயது சகோதரிகள் நடிக்கிறார்கள்.
இது உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக நடைபெறும் ஒன்ற.
இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ‘லிம்கா சாதனை புத்தகம்’ குழுவினர், நேற்று இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்கள்.