மலையாள பட ‘காப்பி’ – ‘நய்யாண்டி’ படத்திற்கு தடை ?

naiyandi_00008னுஷ், நஸ்ரியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் ‘நய்யாண்டி’.

படத்தின் வெளியீட்டின் போதே, அப்படத்தின் நாயகி நஸ்ரியா தான் நடிக்காத ஒரு காட்சியை டூப் வைத்து எடுத்து தன்னை ஆபாசமாக காட்ட முயற்சித்தார் என காவல் துறையிட்ம் புகார் அளித்தார். அதன் பின், சமரசமும் ஆனது.

தற்போது , ‘நய்யாண்டி’ படம் எங்களது தயாரிப்பில் 1993ல் வெளியான ‘மேலப்பரம்பில் ஆண்வீடு’ என்ற மலையாளப்படத்தின் ‘காப்பி’ என தயாரிப்பாளர் மணி சி. கப்பன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ‘நய்யாண்டி’ படத்தை திரையிடவும், வீடியோ உரிமையை விற்கவும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மணி சி. கப்பன்,  “நய்யாண்டி’ படத்தைப் பார்த்தவர்களுக்கு அது ‘மேலப்பரம்பில் ஆண்வீடு’ படத்தின் தழுவல் என்பது நன்றாகவே தெரியும். அப்படத்தில் இடம் பெற்றுள்ள 12க்கும் மேற்பட்ட காட்சிகள் ஒரிஜனல் மலையாளப் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது.

காட்சிகளை மட்டும் காப்பி அடிக்காமல் வசனத்தையும் சேர்த்து காப்பி அடித்திருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல, படத்தின் இயக்குனர் அவருடைய பேட்டிகளில் இது ஒரு மலையாளப்படத்தின் பாதிப்பில் உருவானது என்றும் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, இந்த படத்தை நான் ஹிந்தியில் ரீமேக் செய்வதற்காக இயக்குனர் சித்திக்கிடமும் பேசி வருகிறேன், ” என்று தெரிவித்துள்ளார்.

மலையாளப்படத்தின் கதையைத் தழுவி ஏற்கெனவே பாண்டியராஜன், மோகனா நடித்து ‘வள்ளி வரப்போறா’ என்ற பெயரில் 1995ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான பதிலை ‘நய்யாண்டி’ இயக்குனர் சற்குணத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்.

Read Previous

அழகுராஜா – விமர்சனம்

Read Next

‘புறம்போக்கு’ கிடைத்து விட்டது….