சூர்யா – லிங்குசாமி படம் அடுத்த வாரம் ஷுட்டிங்…

surya lingusamy project_00018சூர்யா – லிங்குசாமி முதன் முறையாக இணையும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் ஷுட்டிங் வரும் 15ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மற்றும் தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்திலும், மனோஜ் பாஜ்பாய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மும்பையில் 25 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பிறகு, கோவாவில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்கள்.

ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இந்த படம் 2014 கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

‘வேட்டை’ படத்தையடுத்து ஒரு இடைவெளிக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படம் இது.

 

Read Previous

காமெடி த்ரில்லர் ‘இருக்கு ஆனா இல்ல’

Read Next

விஜய்க்காக பாடிய இமான்…