தமிழில் வெளிவரும் ஸ்வேதா மேனனின் ‘களிமண்’

uyirin oosai_00018பிரபல மலையாள நடிகையான ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை நேரடியாக படம் பிடித்து அதை ‘களிமண்’ என்ற மலையாளப் படத்தில் இணைக்கப்ட்டு, அப்படம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த படத்தை தற்போது தமிழில் ‘உயிரின் ஓசை’ என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.

ஸ்வேதா மேனன், பிஜூமேனன், சுஹாசினி, லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பிரியதர்சன் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். சுனில்ரெட்டி, அனுபம்கேர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நடிகையாக இருக்கும்  ஸ்வேதா மேனன் பல போராட்டத்திற்கு பிறகு ஒரு படத்தில் கதாநாயகி ஆகிறார். அந்த படத்தின் சிறப்பு காட்சியை காண வரும் அவரது கணவர் பிஜு மேனன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு நிலமைக்கு ஆளாகிறார். இனி பிஜூமேனன் உயிர் பிழைக்க முடியாது என்கிற நிலமையில் உடல் உறுப்புகளை தானமாகக் கொடு என்று நட்பு வட்டாரங்கள் கேட்கிறார்கள்.

எனக்குன்னு ஒரு வாரிசு கூட இல்லையே என்று அவர் கலங்குவதை கண்டு பிஜூமேனனின் உடலிலிருந்து உயிரணுவை எடுத்து ஸ்வேதாமேனனின் கர்ப்பப்பைக்குள் வைத்து அவளைத் தாயாக்குகிறார்கள்.

அந்த பிரசவத்தை முழுவதுமாக படமாக்கி மக்களுக்கு காட்டுங்கள் என்கிறார் நடிகையான ஸ்வேதா மேனன்.

இதற்காக  ஸ்வேதாமேனனின் நிஜ பிரசவத்தை படமாக்கினார்கள். அதற்காக பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு பெண் தாயாவது எவ்வளவு வேதனையானது என்பதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காமக் கொடூரன்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டும் என்றும் கூறி ஸ்வேதாமேனன் அந்த எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மலையாளம், தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் சந்திரன். அவரது மகன் அனூப் பிரசாத் தனது தந்தையை கௌரவிக்கும் பொருட்டு பிரதாப் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி “உயிரின் ஓசை” என்ற படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை இயக்கியிருக்கும் பிளஸ்ஸி, மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர். பல தேசிய விருதுகளை பெற்றவர்.

விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

Read Previous

மீண்டும் நடிக்க வந்த ‘ரோஜா’ மதுபாலா…

Read Next

சம்பளத்தை உயர்த்திய லட்சுமி மேனன்…