‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் “சின்னச் சின்ன ஆசை…’ என பாட்டுப் பாடி அனைவர் மனதிலும் பெரிய இடத்தைப் பிடித்தவர் அப்படத்தின் நாயகி ‘மதுபாலா’.
தொடர்ந்து “அழகன், ஜென்டில்மேன், செந்தமிழ் செல்வன், மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.
அதன் பின் அதிக பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலானார்.
இப்போது சுமார் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க வந்திருக்கிறார். ஆனால், அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை.
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி அடுத்து துல்கர், நஸ்ரியாவை வைத்து இயக்கும் ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் நஸ்ரியாவின் சொந்தக்காரராக நடிக்கிறாராம்.
எத்தனை ஆண்டுகளானாலும் அழகிய ‘ரோஜா’வை மறக்க முடியுமா ?