பல வெற்றிப் படங்களை இயக்கிய பேரரசு தற்போது தமிழ், மலையாளத்தில் இயக்கி வரும் படம் ‘திகார்’.
இந்த படத்தில் நகரத்தையே நடு நடுங்க வைத்து போலீஸ்,சட்டம் என எதையும் மதிக்காமல் வாழும் மிகப் பெரிய டான் அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
பார்த்திபன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடை பெற்றுக்கு கொண்டிருக்கிறது.
இன்னொரு நாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார்.
கதாநாயகிகளாக அகன்ஷா பூரி , கிருதிபாபட் நடிக்கிறார்கள்.
“ஆக்ஷன் படம்ன்னா எப்படி இருக்கும்ன்னு ரசிகர்கள் நினைப்பாங்களோ அதை விட அதிரடியா இந்த படம் இருக்கும்.யாரையும் யோசிக்கவே விடாதா மாதிரி ஆக்ஷன் இதில் இருக்கும்.
படத்தின் பெரும்பகுதி துபாய், ஸ்பெயின், மும்பை போன்ற இடங்களில் பலகோடி செலவு செய்து படமாக்கி இருக்கோம். அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நேற்று துவங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,” என்றார் பேரரசு.