தமிழில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான பெயரை வாங்கவில்லையென்றாலும், விரைவில் அந்த பெயரை வாங்கி விடும் நடிகையாக வரப் போகிறார் சமந்தா.
சூர்யா, விஜய் என இரு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதென்றால் சும்மாவா…சமந்தாவும் விரைவில் தமிழில் முன்னணி நடிகையாக வந்து விட மாட்டாரா என்ன ?
ஆனால், தெலுங்கு திரையுலகில் சமந்தாவுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது.
அதே சமயம், சமந்தாவும் ஒரு நடிகைக்கு ரசிகையாகி இருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல ‘சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா,’ படங்களின் கதாநாயகி தீபிகா படுகோனே.
“இப்பொழுது நான் எந்த நடிகையைப் பார்த்தும் பரவசப்படுவதில்லை. ஆனால், ஒருவரைத் தவிர. அவர்தான் தீபிகா படுகோனே…சே என்ன அழகு…பர்பெக்ஷன்” என தீபிகாவைப் பாராட்டியிருக்கிறார் சமந்தா.