‘ப.பத்மினியும்’ – மூன்று கோடிக்கு வாங்கிய புதுயுகம்

pannaiyarum padminiyum_00007புதிது புதிதாக சேனல்கள் வரவர திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமை சில கோடிகளைத் தாண்டுவது வாடிக்கையாகிவிட்டது.

ஏற்கெனவே ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிக விலை கொடுத்து படங்களை வாங்கி வருகிறது. சர்வ சாதாரணமாக நான்கைந்து கோடிகள் படங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டிதான் அதற்குக் காரணம். இதில், முக்கிய விஷயம் என்னவென்றால், அந்த படங்களின் பட்ஜெட்டை விட இரு மடங்கு சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கப்படுவதுதான்.

அந்த வகையில் நேற்று இசை வெளியீடு நடைபெற்ற விஜய் சேதுபதி நடித்த  ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை புதுயுகம் தொலைக்காட்சி மூன்று கோடிக்கும் மேல் கொடுத்து சாட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கிறது.

அத் தொலைக்காட்சி, வெளியீட்டிற்கு முன்னதாகவே வாங்கிய முதல் திரைப்படம் இதுதான். அதன் பின் தான் ‘சுட்ட கதை’ போன்ற படங்களை வாங்கியுள்ளார்கள்.

தற்போது சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளுடன் படங்களை வாங்க புது யுகம் சேனலும் போட்டி போட்டு வருகிறது.

அதோடு ராஜ் டிவியும் மீண்டும் களத்தில் குதித்துள்ளது. அவர்களும் விஷால் நடித்த ‘பாண்டிய நாடு’ திரைப்படத்தை 7 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கியுள்ளனர்.

நல்ல படம் எடுங்கள் தயாரிப்பாளர்களே, கை மேல் உங்களுக்கு கோடிகள் காத்திருக்கின்றன…

Read Previous

ஒரு கோடி சம்பளம் கேட்கிறாரா நஸ்ரியா ?

Read Next

ஜெயம் ரவி – நயன்தாரா படம் விரைவில் ஆரம்பம்…