‘நேரம்’ படத்தில் நடித்து பெயரையும், ‘நய்யாண்டி’ படத்தில் நடித்து புகழையும் வாங்கியவர் நஸ்ரியா.
‘நேரம்’ படத்தில் நடித்ததற்காகவும், ‘நய்யாண்டி’ படத்தில் பிரச்சனையைக் கிளப்பியதற்காகவும், பெயரையும் , புகழையும் பெற்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘நய்யாண்டி’ விவகாரத்திற்குப் பிறகு அவரைத் தேடி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போக மாட்டார்கள் என்று செய்திகள் வெளியானாலும், நஸ்ரியாவைத் தேடி பலரும் போய்க் கொண்டுதானிருக்கிறார்களாம்.
ஜீவா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நஸ்ரியா, அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நஸ்ரியாதான் நடிக்கிறாராம்.
அப்படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ் ரசிகர்களின் புண்ணியத்தால், இன்னும் கொஞ்ச நாளைக்கு நஸ்ரியா காட்டில் மழை…இல்லை இல்லை ‘பண மழை’ பெய்யப் போகிறது.
எப்படியோ வந்தாரை வாழ வைக்கும் இந்த தமிழ்நாடு…