தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. விரைவில் தமிழிலும் அந்த இடத்தைப் பிடிப்பதற்காக சூர்யாவுடனும், விஜய்யுடனும் ஜோடி சேருகிறார்.
சமீபத்தில் சமந்தா, அனுஷ்காவைப் பற்றி சொன்னதாக ஒரு தெலுங்கு இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியானது.
ஆனால், தான் அம்மாதிரி எதுவுமே சொல்லவில்லை என மறுக்கிறார் சமந்தா.
“மிகவும் வருத்தமாக உள்ளது. நான் தராத பேட்டியையெல்லாம் வெளியிடுகிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. உண்மையிலிருந்து அவை வெகு தொலைவில் உள்ளன. இனி, நான் தரும் பேட்டிகள் எவை என்பதை நானே வெளியிடுகிறேன், மற்றவை போலியானவை என நீங்களே புரிந்து கொள்ளுங்கள், ” என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தாவை வருத்தப்படுத்திய அந்த போலி பேட்டி இதோ,
“அனுஷ்கா சுயநலமில்லாதவர். அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவார். யாரிடமும், தன்னுடைய கதாபாத்திரம்தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னதேயில்லை. இந்த குணங்கள்தான் அவரை இன்று வரை முன்னணி நடிகையாக இருக்க வைக்கிறது,”.
அனுஷ்கா பத்தி தான் சொன்னதா நல்ல விதமா எழுதியிருக்காங்கன்ற கவலையா சமந்தாவுக்கு….