ஜெயம் ரவி – நயன்தாரா படம் விரைவில் ஆரம்பம்…

nayanthara 17-6_00020‘ஜெயம்’ ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் புதிய படத்தின் பூஜை போடப்பட்டு பல மாதங்களாகியும், அந்த படம் இன்னும் ஆரம்பிக்கப்படவேயில்லை.

ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என்று மட்டும் தகவல் சில மாதங்களுக்குப் பின் வெளியானது.

அதன் பின் அந்த படத்தைப் பற்றிய சத்தமேயில்லை. இதனிடையே தான் நடிக்கும் ‘நிமிர்ந்து நில், பூலோகம்’ ஆகிய படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஜெயம் ரவி இருந்ததால்தான் அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிப்பது தள்ளிப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாம்.

இப்போது அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடையும் நிலைக்கு வந்து விட்டதால், விரைவில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாம்.

ஜெயம் ரவி இந்த படத்தில் போலீஸ் ஆபீசராக நடிக்க உள்ளாராம். ராஜா முதன் முறையாக சொந்த கதையை எழுதி இந்த படத்தை இயக்குகிறாராம்.

ஏற்கனெவே பத்திரிகைகள் அவரை ரீமேக் ராஜா என்றே அழைக்கின்றன. இந்த படத்திற்குப் பிறகு ரியல் ராஜா என்றே அழைப்பார்கள் எனலாம்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது இந்த படம்.

புது ஜோடியோட பட்டைய கிளப்புங்க ரவி…

Read Previous

‘ப.பத்மினியும்’ – மூன்று கோடிக்கு வாங்கிய புதுயுகம்

Read Next

வீட்டுக்குள் புகுந்தவர் மீது ஸ்ருதிஹாசன் புகார்…