பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘கோச்சடையான்’ வெளியீடு தள்ளிப் போகலாம் என தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி மற்றும் பலர் நடிக்க ‘மோஷன் கேப்சரிங்’ முறையில் பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் விஜய் நடிக்கும் ‘ஜில்லா’, அஜித் நடிக்கும் ‘வீரம்’ ஆகிய படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் இருக்கும் 1100 திரையரங்குகளில் இம் மூன்று படங்களை வெளியிடுவதில் சிக்கல் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ‘கோச்சடையான்’ படத்தை 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இருக்கிறதே 1100 தியேட்டர்தானே…
அப்படியிருக்கு மூன்று வசூல் மன்னர்கள் படங்கள் ஒரே நாளில் வெளிவருவது வசூல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
விஜய், அஜித் படங்களுடன் ரஜினி படம் போட்டி போடுவதும் சரியாக இருக்காது, எனவே ‘கோச்சடையான்’ வெளியீட்டை தள்ளிப் போட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
ம்ம்ம்…சிங்கம் சிங்கிளாத்தானே வரணும்…