‘போடா போடி’ ஹீரோ படத்தை வாங்க ‘போட்டா போட்டி’…

simbu-nayanthara-vallavanசிம்புவுடன் நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்கிறார்…என்ற ஒரு வரிச் செய்தியை வைத்தே ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் ‘சிம்பு – நயன்தாரா’ மீண்டும் ஜோடி சேரும் படத்திற்கு நல்ல விளம்பரத்தை தேடிக் கொண்டார்கள்.

அந்த விளம்பரம் விநியோகஸ்தர்களை தானாகவே வீடு தேடி வர வைத்து விட்டது.

படத்தை வாங்க ‘நான் நீ’ என ‘போட்டா போட்டி’ நடப்பதாக தகவல் வந்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கம் ஒரு பக்கம், இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாவது மறுபக்கம் என படத்தைத் தயாரிக்கும் டி.ராஜேந்தருக்கு இந்த படம் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு ஜாக்பாட் என பேசிக் கொள்கிறார்கள்.

இப்போதே பல ஏரியாக்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க பலர் முன் வருகிறார்களாம். அது மட்டுமல்ல, படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கவும் கடும் போட்டி நிலவுகிறதாம்.

எல்லாம் நல்லபடியாக நடந்தால் 2014ம் ஆண்டின் மிகப் பெரும் படமாக இப்படம் அமையும் என சொல்கிறார்கள்.

வம்பு, தும்பு இல்லாம நடந்தால் சரி….

 

Read Previous

அனிமேஷன் படத்தில் சூர்யா – அனுஷ்கா…

Read Next

‘கோச்சடையான்’ பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை…?

Most Popular