அப்பா ஒரு திரைப்பட தயாரிப்பாளர்…மூத்த மகன் திரைப்பட இயக்குனர்…இளைய மகன் நடிகர்…இப்படி ஒரே குடும்பத்தில் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் இருந்தால் யாருக்கு பிரச்சனை, அந்த நடிகருக்கு கதை சொல்லும் இயக்குனர்களுக்குத்தான்….
‘நிமிர்ந்து நில்’ படத்தின் கதையை உருவாக்கியதும் அதை ஜெயம் ரவியிடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. அப்புறம் ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குனருமான ராஜா, அப்பாவும் தயாரிப்பாளருமான மோகன் ஆகியோரிடமும் கதையை சொல்லியிருக்கிறார்.
ஆனால், ஆளாளுக்கு படத்தின் கதையில் ‘கரெக்ஷன்’ சொல்லியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன சமுத்திரக்கனி இந்த படத்தை பண்ணவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாராம்.
அதன் பின்தான் சமுத்திரக்கனியின் நண்பரான இயக்குனர் கரு.பழனியப்பன், படம் நன்றாக வரத்தானே அவர்களும் சொல்கிறார்கள் என சமாதானம் சொல்லி இந்த ‘நிமிர்ந்து நில்’ படம் இன்று இசை வெளியீடு வரும் வரை உதவியாக இருந்திருக்கிறார் கரு.பழனியப்பன்.
மேற்கண்ட சம்பவத்தை இன்று இசை வெளியீடு நடந்த விழாவிலும் வெளியில் சொன்னது கரு.பழனியப்பன்தான்.
ஆனால், தனது குடும்ப ரகசியத்தை இப்படி போட்டு உடைக்கிறாரே என ஜெயம் ரவி எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘நிமிர்ந்து நில்’ படம் முடிப்பதற்குள் எப்படியெல்லாம் குனிந்து நிமிர வேண்டியிருக்கிறது .