சிம்புவிற்கு காலத்திற்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்த படம் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.
இப்போது மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதம் மேனன், “சிம்பு ஒரு சிறந்த நடிகர், சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து அவர் நடித்தால் தென்னிந்தியாவின் ரன்பீர் கபூர் ஆகலாம்,” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த ரன்பீர் கபூர் எனக் கேட்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம். 1973ல் வெளிவந்த ‘பாபி’ ஹிந்திப் படத்தின் நாயகன் ரிஷி கபூரின் மகன்தான் இந்த ரன்பீர் கபூர்.
2007ம் ஆண்டு ‘சவாரியா’ என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகமாகி ‘வேக் அப் சித், ராஜ் நீதி, ராக்ஸ்டார், பர்ஃபி, ஹே ஜவானி ஹை தீவானி, பேஷரம்’ உட்பட பல ஹிந்திப் படங்களில் நடித்து காதல் நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர்.
ஏற்கெனவே, இங்க சிம்பு காதல் நாயகனாதான் வலம் வந்துக்கிட்டிருக்காரு….