பத்து வருடங்களுக்கு முன்னால் ‘லேசா லேசா’ படம் மூலம் அறிமுகமானவர் த்ரிஷா. ஆனால், அதற்கு முன்னதாக ‘மௌனம் பேசியதே’ படம் வெளியானது.
பத்து ஆண்டுகள் ஆனாலும் அன்று எப்படி இருந்தாரோ, இன்றும் அப்படியேதான் இருக்கிறார் த்ரிஷா.
ஒரு நடிகை திரையுலகில் பத்து ஆண்டு காலமாக ஹீரோயினாகவே நிலைத்து நிற்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல.
ரஜினிகாந்த் தவிர, ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் த்ரிஷா.
இவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘என்றென்றும் புன்னகை’. தொடர்ந்து ஜெயம் ரவியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள ‘பூலோகம்’ திரைப்படம் வெளிவர உள்ளது.
சரி…த்ரிஷாவின் ஸ்லிம் ரகசியம் என்ன தெரியுமா…அவர் சாப்பிடுவது தண்ணீர், சாத்துக்குடி, மாதுளை ஜுஸ் என வெறும் திரவ உணவுகள்தானாம். அதனால்தான் தன்னால் இப்படி ‘ஸ்லிம்’ ஆக மெயின்டெய்ன் பண்ண முடிகிறது என்கிறார் த்ரிஷா…