யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்திய திரை உலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்துக் கொண்டவர்கள்.
சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யாஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் ‘ ஆஹா கல்யாணம் ‘ மூலம் தடம் பதிக்க உள்ளனர்.
ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற ‘ பேண்ட் பஜா பராத் ‘ படத்தை தமிழில் தயாரித்து உள்ளனர்.
சடங்கு, சம்பிரதாயம் ,உள்ளிட்ட ஆடம்பர திருமணங்களைப் பற்றியும் , அந்த திருமணத்தை நடத்தும் நிறுவனங்கள் பற்றியும், இசை கலந்த காதல் உணர்வோடு கலவையாக தயாரிக்கப்படும் படம் தான் ‘ ஆஹா கல்யாணம்’.
‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நானி , துடிப்புள்ள நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பை நாயகி வாணி குப்தா நாயகியாக நடிக்கிறார் .
இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோகுல் இப்படத்தை இயக்குகிறார். தமிழில் வெளியாகும் ‘தூம் 3’ திரைப்படத்துடன் ‘ ஆஹா கல்யாணம் ‘ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப் படுகிறது.
ஒளிப்பதிவாளர் லோகநாதனின் கண்கவரும் ஒளிப்பதிவில் , தரனின் மெய் மறக்கச் செய்யும் இசையில் உருவான பாடல்கள் செவிக்கு விருந்தாக அமையும் .
‘ ஆஹா கல்யாணம் ‘ ஆஹா என ரசிக்க வைக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.