இளையராஜா இசையைத்தான் ‘காப்பி’ அடிக்கிறேன் – பிரேம்ஜி

maanga_00020வெங்கட் பிரபுவின் தயவால் நடிகராகவும் அனைத்து ஹீரோக்களுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் அவருடைய தம்பி பிரேம்ஜி.

சமீபத்தில் வெளிவந்த ‘பிரியாணி’ படத்தில் கூட கார்த்தியின் நண்பராக நடித்திருந்தாலும் படம் முழுவதும் இவர் வரும்படி முக்கியத்துவம் கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு.

நடிகராக மட்டுமல்லாமல் ‘என்னமோ நடக்குது, மாங்கா’ படங்களுக்கும் பிரேம்ஜி இசையமைத்து வருகிறார்.

‘பிரியாணி’ படத்தின் பிரமோஷனுக்காக நேற்று விஜய் டிவியில் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரும் கலந்து கொண்டனர்.

அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பிரேம்ஜி அளித்த பதில் , இதோ…

“நான் இசையமைக்கிற படங்கள்ல பெரியப்பா இளையராஜா இசையைத்தான் ‘காப்பி’ அடிக்கிறேன். டைரக்டர்ஸ் இப்படி வேணும் அப்படி வேணும்னு கேப்பாங்க. நான் இளையராஜா இசையில ஏதாச்சும் பாடல் சொல்லுங்கன்னு கேப்பேன், அதை அப்படியே உல்டா பண்ணி  பாட்டால் மாத்திடுவேன்.

ஏன்னா, நான் முறையா இசை படிக்கலை, ராகம்லாம் எனக்குத் தெரியாது.

அப்புறம், நிறைய பேர் நான் வெங்கட் பிரபு படத்துல நடிக்கிறன்னு கமென்ட் பண்றாங்க. ட்விட்டர், பேஸ்புக்லலாம் கூட வந்து, “வெங்கட் பிரபு நிழல்ல இருக்கிறன், நான் வேஸ்ட், மொக்கை பீசு” அப்படின்னு கமென்ட் பண்றாங்க.

ஆமாம், நான் வேஸ்ட்தான், மொக்கை பீசுதான். வெங்கட் பிரபு படத்துலதான நான் நடிக்கிறேன். உனக்கு ஏன்யா எரியுது.

என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தினது சிம்புதான். ‘வல்லவன்’ படத்துல நயன்தாரா ஃபிரண்டா என்னை அறிமுகப்படுத்தினாரு. அவரே, வெங்கட் கிட்ட சொல்லி என் கிட்ட என்னமோ இருக்குன்னு சொன்னதாலதான் வெங்கட்டும் ‘சென்னை 28’ல நடிக்க வச்சாரு, ” என்றார்.

பிரேம்ஜிய நடிகராக்கின நல்ல காரியத்தை பண்ணது நீங்கதானா சிம்பு….

உங்களைத்தான் நிறைய பேர் தேடிட்டிருக்காங்க…

Read Previous

ரஜினி பாராட்டினால் படம் ஓடி விடுமா ?

Read Next

‘கொல வெறி’ பாடி சலிச்சி போச்சி – தனுஷ்