‘கொல வெறி’ பாடி சலிச்சி போச்சி – தனுஷ்

dhanush in 3தனுஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஒரே நாளில் உலகப் புகழ் தேடிக் கொடுத்த பாடல் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல்.

இப்பாடல் வீடியோ வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். இதுவரை இப்பாடல் 7,53,84,530 ஹிட்களை யூ டியூப்பில் அள்ளியுள்ளது.

அதன் பிறகு தனுஷ் எங்கு சென்றாலும் அந்த பாடலைப் பாடச் சொல்லி ஒரே அன்புத் தொல்லையாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த பாடலைப் பாடிய தனுஷ், இப்போது அந்த  பாடலைப் பாடிப் பாடி போரடித்து விட்டது என்கிறார்.

“என்னை நடிகன் என்றே மறந்து விட்டார்கள் எனத் தோன்றுகிறது. நான் எங்கே சென்றாலும் முதலில் ‘கொல வெறி’ பாடலில் இருந்து இரண்டு வரிகளாவது பாட வேண்டும் என்கிறார்கள்.

அவர்ளின் அளவு கடந்த மரியாதை மகிழ்ச்சியடைய வைக்கிறது, இருந்தாலும் இப்போது ரொம்பவே போர் அடிக்கிறது,” என்கிறார் தனுஷ்.

சர்வதேச அளவில் ‘பேர்’ வாங்கிக் கொடுத்த பாடலை ‘போர்’ அடிக்கிறது என்பது சரியா தனுஷ்….

Read Previous

இளையராஜா இசையைத்தான் ‘காப்பி’ அடிக்கிறேன் – பிரேம்ஜி

Read Next

‘பாவாடை-தாவணி’யில் சன்னி லியோன்…