‘இரண்டாம் உலகம்’ – விலகியது ஏன் ? – ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்…

harris-jayaraj-2312செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்க மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி , இரண்டே நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்ட படம் ‘இரண்டாம் உலகம்’.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனவர் ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களுக்கு மட்டும் ஹாரிஸ் இசையமைத்தார்.  பாடல்களையும் கூட சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியிட்டார்கள். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென அனிருத் படத்திற்கு பின்னணி இசையை அமைக்கிறார் என்றார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் மிகவும் பிஸியாக இருப்பதால் இந்த படத்திற்கு அவர் பின்னணி இசையை அமைக்கவில்லை, படத்தின் வெளியீட்டைக் கருதி , அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம் என்றார்கள் ‘இரண்டாம் உலகம்’ தரப்பினர்.

ஆனால் , அந்த படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் போட்டு உடைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இன்று காலை ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், “நான் பிஸியாக இருந்த போது இந்த படத்தின் இயக்குனர் அஹமத் வந்து என்னிடம் கதை சொன்னார். ஏற்கெனவே, சில படங்களை ஒத்துக் கொண்டிருந்ததால் இந்த படத்திற்கு எப்படி இசையமைப்பது என்று யோசித்தேன்.

அதன் பின், படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தால், ‘என்றென்றும் புன்னகை’ படத்திற்கு இசையமைக்க சம்மதித்தேன்.

படம் முடிந்து பின்னணி இசைக்கு தயாரானதும், அதே சமயம் வேறு ஒரு பிரம்மாண்டமான படத்திற்கும் பின்னணி இசையமைக்கும் வேலை வந்தது. அந்த படத்தைப் பார்த்தேன். அதன் பிறகு இந்த படத்தையும் பார்த்தேன்.

எனக்கு இந்த படம்தான் மிகவும் பிடித்திருந்தது. எனவே, அந்த படம் சம்பந்தப்பட்டவர்களிடம் எனக்கு அதிக வேலை இருப்பதால் பின்னணி இசையமைக்க முடியாது என்று தெரிவித்தேன், ” என்றார்.

ஹாரிஸ் சொன்ன அந்த படம் ‘இரண்டாம் உலகம்’தான் என்பது சின்ன குழந்தையால் கூடவா கண்டு பிடிக்கமுடியாது…

அப்போதே ‘இரண்டாம் உலகம்’  படத்தின் தரத்தை தீர்மானித்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ் ‘என்றென்றும்’ வெற்றி படத்தில் இருக்க ‘என்றென்றும் புன்னகை’ படத்தை தேர்வு செய்துள்ளார்.

 

Read Previous

மருத்துவமனையில் இளையராஜா…

Read Next

‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ – வட சென்னை கதை…