‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ – வட சென்னை கதை…

nangellam edagoodam_00008குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்க ஆர். விஜயகுமார் இயக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’.

இப்படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்களே. தயாரிப்பாளரின் தம்பி மனோஜ் தேவதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக பார்வதி சுரேஷ் அறிமுகமாகிறார்.

மற்றும் விசாகர், ஹென்சா, ராஜேஷ், ஜார்ஜ் விஜய், பாலாஜி, ஜெப்ரி, சியானோ பின்டோ ஆகியோரும் அறிமுகமாகிறார்கள்.

இப்படம் வட சென்னையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வட சென்னைப் பகுதியில் அந்த காலத்தில தாதாவாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாக்சிங் கற்றுக் கொண்டு அந்த ஏரியாவையே ஆட்டிப் படைப்பவர்களாக இருப்பார்களாம்.

இப்படத்தின் ஹீரோவும் பாக்சிங் கற்றுக் கொண்டு ஒரு ரவுடியாக வர நினைக்கிறார். ஆனால், அவரை அப்படி வேறு எந்த வழியிலும் செல்ல வைக்காமல் நல்வழிப்படுத்துகிறார் அவருடைய குரு.

அந்த ரவுடித்தனமான நாயகனை ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் பெண் காதலிக்கிறார்.

என்ன சார், வழக்கம் போல ரவுடியைக் காதலிக்கிற படிச்ச ஹீரோ கதையா என இயக்குனர் விஜயகுமாரிடம் கேட்டோம்.

“அப்படியெல்லாம் இல்லை, என் படத்துல ஹீரோ, ஹீரோயினும் ஆரம்பத்துல இருந்தே காதலிக்கலை. அவங்களுக்குள்ள காதல் வெளிப்படுறதே கிளைமாக்சுலதான். மற்ற படங்கள் மாதிரி இல்லாம வித்தியாசமா இருக்கணும்னு நினைச்சிதான் இப்படத்தை எடுத்திருக்கோம்.

முற்றிலும் புதுமுகங்களை வச்சி படம் தயாரிச்சிருக்கிறதுலயே எங்களோட தைரியம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். மற்ற எந்த படங்களோட சாயல் துளியும் இந்த படத்துல கிடையாது.

இந்த படத்துக்காக தேர்வான நடிகர்களுக்கு இரண்டு மாசம் நடிப்புப் பயிற்சி கொடுத்தோம். அவங்க செஞ்ச தவறுகளைத் திருத்தி , ஷுட்டிங்கை சீக்கிரமா முடிச்சோம்.

ஹீரோவுக்கும் படத்துல பாக்சர் கேரக்டர்ல நடிக்கிற மத்தவங்களுக்கும் 40 நாளுக்கு மேல பாக்சிங் பயிற்சி வேற கொடுத்திருக்கோம்,” என்றார்.

அது என்னங்க டைட்டிலே ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என்ன அர்த்தம் என்றதற்கு,

“படத்துல ஹீரோவும் அவர் நண்பர்களும் செய்யற விஷயங்கள் எல்லாமே ஏடா கூடாமாத்தான் போய் முடியும், அதான் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என்ற டைட்டில், ” என்றார்.

புதிய முயற்சிகளுக்கு நம் ரசிகர்கள் நிச்சயம் கைகொடுப்பார்கள்.  ‘நீங்கெல்லாம் நல்லா வருவீங்க’….

Read Previous

‘இரண்டாம் உலகம்’ – விலகியது ஏன் ? – ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்…

Read Next

‘தூம் – 3’ – மூன்றே நாளில் 170 கோடி வசூல்…